இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடிகை கஸ்தூரியின் பதில்
ஐயப்ப பக்தர்களை மனம் புண்படும்படி பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி, "இதற்கு பதில் உங்களுக்கு தெரிந்தது தானே" என்று மிகவும் கவனமாக பதில் அளித்துள்ளார்.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கையெழுத்து போட வந்த கஸ்தூரி, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "நான் ஹைதராபாத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். எனது மகன் அங்கு தான் படித்து வருகிறான்.
நான் தற்போது இரண்டு திரைப்படங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். என்னால் படப்பிடிப்புக்கு செல்ல முடியாததால், படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. எனவே தினமும் கையெழுத்து போடும் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று மனு போட்டு இருக்கின்றேன். அந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது," என்று தெரிவித்தார்.
அதன் பின், ஐயப்ப பக்தர்கள் மனம் புண்படும்படி பாடல் பாடிய இசைவாணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு, "ஒருவேளை எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியவில்லையா என தெரியவில்லை," என்று கூறினார். மேலும், "இதற்கு பதில் உங்களுக்கு தெரிந்தது தானே," என்றும் கவனமான வார்த்தைகளை பயன்படுத்தி பேட்டியை முடித்தார்.
Edited by Mahendran