வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2024 (12:08 IST)

கைது செய்ய போலீஸ் சென்ற போது கதவை பூட்டி கொண்ட கஸ்தூரி.. என்ன நடந்தது?

நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் தலைமறைவாக தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைது செய்யப்படும் முன் நடந்தது என்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ஹைதராபாத்தில் நேற்று கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீஸ் சார் கைது செய்தனர். கைது செய்ய கஸ்தூரி இருக்கும் இடத்திற்கு போலீசார் சென்றபோது, அவர் கதவைப் பூட்டிக் கொண்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததாக தெரிகிறது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடுவோம் என போலீசார் கூறிய பின்பே கஸ்தூரி கதவை திறந்ததாக கூறப்படுகிறது.

மேலும், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, தயாரிப்பாளரின் செல்போனை மட்டுமே கஸ்தூரி பயன்படுத்தி வந்துள்ளார் என்றும், ஹைதராபாத்தில் எங்கேயும் வெளியே செல்லாமல் தயாரிப்பாளர் வீட்டுக்குள்ளேயே கஸ்தூரி பதுங்கி இருந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

எனினும் அந்த தயாரிப்பாளர் யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva