1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (15:08 IST)

அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல: ஸ்டெர்லைட் குறித்து விவேக்

அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல: ஸ்டெர்லைட் குறித்து விவேக்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்த போதிலும் கடந்த ஒரு சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டம் உலகின் கவனத்தை திருப்பியுள்ளது. லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன்பே தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தற்போது திரை நட்சத்திரங்களும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட ஒருசில நடிகர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் விவேக் தனது டுவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல: ஸ்டெர்லைட் குறித்து விவேக்
விவேக் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே? அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மன்றாடி கேட்கிறேன்.அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல! என்று கூறியுள்ளார்.