100 ஆண்டுகள் இல்லாத அளவு மழை: தத்தளிக்கும் ஐத்ராபாத்!!
100 ஆண்டுகள் இல்லாத அளவு ஐத்ராபாத்தில் இந்த ஆண்டு மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் ஐதராபாத் நகரில் கனமழையால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து 15 நாட்கள் பெய்த கனமழையால் மக்கள் அவதிக்கொள்ளாகினர்.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, கடந்த 15 நாட்களில் மட்டும் 248.3 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும்.
கடந்த 1916 ஆம் ஆண்டு அக்டோபரில் 355.1 மிமீ மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் அக்டோபரில் இரண்டாவது முறையாக 200மிமீ அளவை தாண்டி மழை பெய்துள்ளது.