1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Actor Vijay's plan to start a political party?..!

அரசியல் கட்சி தொடங்க நடிகர் விஜய் திட்டம்?. அரசியல் கட்சியாக உருவெடுக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.!!

vijayy
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளுடன்,  சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தேர்தலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்குமாறும்,  பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 
மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதால், தமிழக அரசியல் களம் மேலும் சூடு பிடித்துள்ளது.
About Writer
Senthil Velan
அடுத்த கட்டுரையில்
இளைஞரணி மாநாட்டிற்கு எதிர்பார்த்த கூட்டம் ஏன் வரவில்லை? நிர்வாகிகளை காய்ச்சி எடுத்த தலைமை?