1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AI technology karunanidhi election campaign dmk planned

AI தொழில்நுட்பத்தில் கருணாநிதி! திமுகவின் மாஸ் தேர்தல் பிரசார திட்டம்..!

AI தொழில்நுட்பம்
AI தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடியோ உருவாக்கி அதை வைத்து பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அரசியலிலும் புகுந்துள்ளது. ஏற்கனவே திமுக இளைஞரணி  மாநாட்டில் AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கருணாநிதி பேசிய வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் AI தொழில்நுட்பத்தின் மூலம் கருணாநிதி பேசுவது போல் வீடியோ உருவாக்கி அதை பட்டிதொட்டி எங்கும் ஒளிபரப்பாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இதற்கு போட்டியாக AI தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர் பேசுவது போல், ஜெயலலிதா பேசுவது போல் வீடியோ உருவாக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இதனால் வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் AI தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அமர் பிரசாத்தை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைப்பு! தலைமறைவாகிவிட்டாரா?