1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (10:35 IST)

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சிவராஜ்குமார் அஞ்சலி..! பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்.!!

kannada actor
மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கு, கன்னட நடிகர் சிவராஜ்குமார் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
 
vovt
 
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 29ஆம் தேதி அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின்  சகோதரரும், நடிகருமான சிவ்ராஜ் குமார் சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.