செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 நவம்பர் 2021 (11:06 IST)

ஜெய் பீம் படத்தைப் பாராட்டிய ஷைலஜா டீச்சர்!

சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெய் பீம் படத்தை முன்னாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா பாராட்டியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் காவல்துறை அடக்குமுறைகளை எடுத்துக்காட்டும் விதமாக உருவான இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டது.

25 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.

இந்நிலையில் முன்னாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் வெளியிட்டுள்ள டிவீட்டில் ‘இந்த படம் மாற்றத்துக்கான ஒரு உத்வேகமாக அமையும். அதிகார வன்முறை மற்றும் சமூக ஒடுக்குமுறைய நம்பகமாக சித்தரித்துள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.