என்ன பாத்து பாஜக ஆளுனு சொல்றாங்க... மன்ற நிர்வாகிகளிடம் குமுறிய ரஜினிகாந்த்?
தன்னை பாஜக ஆதரவாளர் என கூறிவதௌ வேதனையளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் வேதனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகையை கடந்த 2017 ஆம் உறுதி செய்தார். அதன் பின்னர் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தனது அரசியல் நிலைபாடு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்.
ஆனால், வெளியில் அமைதியாக காணப்பட்டாலும் உள்ளுக்குள் நேரடியாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, ரஜினி தயாராகி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் ரஜினி கட்சி துவங்கினால் பாஜகவுடன் கூட்டணி வைப்பார், ரஜினி பாஜக ஆதரவாளராக தன்னை நிலைப்படுத்திக்கொள்வார் என பல செய்திகள் வெளியாகின்றன.
அந்த வகையில் தற்போது இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி ரஜினி அரசியலில் புது பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆம், நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும். அந்த கூட்டத்தில், தான் பாஜக ஆதரவாளராக முத்திர குத்தப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தனது மனகுமுறலை கொட்டி தீர்த்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, ரஜினியின் அரசியல் பயணம் ஆன்மிகப்பாதையில் இருக்கும் என்பதால் சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை விலக்கி வைக்க சிலர் முயற்சிப்பதாவகவும் வருத்தம் தெரிவித்தாராம். இதை தவிர்த்து மாநாடுகள் நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார் என அச்செய்தி தெரிவிக்கிறது.
ரஜினிகாந்த் பாஜவின் முடிவுகளை ஆதரிப்பதால், அவருடைய சில கருத்துக்கள் பாஜகவினருடன் ஒத்துபோவதாலும், பாஜகவினரும் ரஜினியை ஆதரிக்கும் வகையில் பேசுவதாலும் ரஜினி பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பார் என பொதுவான கருத்து இருந்து வந்த நிலையில் அதை உடைத்தெறியும் வகையில் இந்த செய்தி உள்ளது.
மேலும், அவர் தனிக்கட்சி துவங்கி தனது பாணியில் அரசியல் செய்வார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.