1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor prabu support tvk vijay for his polytical carrier

தம்பி இறங்கி அடிக்கிறார்!.. அவருக்கு என் ஆதரவு உண்டு!.. திரையுலகில் முதல் ஆதரவு!..

vijay prabu
எம்ஜிஆருக்கு பின் சிவாஜி கணேசன்,பாக்கியராஜ்,  டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் என பலரும் அரசியல் கட்சி துவங்கினார்கள். அதில் விஜயகாந்துக்கு மட்டுமே மக்கள் ஆதரவு கொடுத்து அவரை எதிர்க்கட்சித் தலைவர் வரை கொண்டு சென்றார்கள்.
மற்றவர்கள் அரசியலில் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில்தான் தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. அதுவும் ஆளும்கட்சியான திமுகவை கடந்த சில வருடங்களாக அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்..

பொதுவாக ஆளுங்கட்சியை பகைத்துக் கொண்டால் நம் படங்களுக்கு பிரச்சனை செய்வார்கள் என்பதால் நடிகர்கள் யாரும் ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.. அதேபோல் ஆளுங்கட்சியை எதிர்த்து அரசியல் செய்பவர்களுக்கு ஆதரவும் கொடுக்க மாட்டார்கள்..
அப்படியே உள்ளுக்குள் ஆதரவு இருந்தாலும் அதை வெளியே சொல்ல மாட்டார்கள்.. இதுதான் திரையுலகினரின் குணம்..

ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் பிரபல நடிகருமான பிரபு விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய பிரபு ‘விஜய் தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. எங்க அப்பாவோட ஆசை அவருக்கு எப்பவும் உண்டு.. எங்களுடைய ஆசீர்வாதமும் தம்பிக்கு உண்டு.. இப்ப தம்பி இவ்வளவு தைரியமா அடிச்சு ஆடுறார்னா கடவுளின் அருள் அவருக்கு இருக்கு.. மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது.. என் ஆதரவு அவருக்கு உண்டு.. தம்பி நல்லா இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.. நல்லா வரணும்’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

திரையுலகில் ரஜினி, கமல் போன்றவர்கள் விஜயை ஆதரித்து ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில் பிரபு பேசியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
About Writer
Mahendran