திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (09:38 IST)

சர்வதேச போட்டியில் சாதித்த நடிகர் மாதவன் மகன்! – குவியும் பாராட்டுகள்!

Vedaanth Madhavan
பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த சர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த. நீச்சல் போட்டிகளில் தீவிர ஈடுபாடு கொண்ட வேதாந்த் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்று வருகிறார்.

டென்மார்க் நாட்டில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் வேதாந்த் கலந்து கொண்டார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட அவர் 1500 மீட்டர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.