வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: நாமக்கல் , வியாழன், 11 ஏப்ரல் 2024 (14:20 IST)

தனியார் கல்வி நிறுவன"ஞான் பெஸ்ட் 2k24" என்ற தலைப்பில் ஆண்டு விழாவில் -நடிகர் ஜீவா பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஞானமணி தனியார் கல்வி நிறுவனங்களில் "ஞான் பெஸ்ட் 2 கே 24" என்ற தலைப்பில் ஆண்டு விழா நடைபெற்றது. 
 
இந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் தி.அரங்கண்ணல், மற்றும் தாளாளர் திருமதி மாலா லீனா ஆகியோர் தலைமை வகித்தனர். 
 
தொடர்ந்து இந்த ஆண்டு விழா 2k 24 நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு மாணவ மாணவர்களிடத்தில் தனது பள்ளி கல்லூரி படிப்பை பற்றி எடுத்துக் கூறியும், மேலும் மாணவ மாணவிகள் எவ்வாறு கல்வி கற்க வேண்டும், இந்த கல்வியை பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் சிறந்து பல உயர் பதவிகளில் நீங்கள் அமர வேண்டும், அதற்கு உண்டான அனைத்து திறமைகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் உங்களது தனி திறமையை நீங்கள் வெளிப்படுத்த ஒவ்வொருவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் மேலும் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நீங்கள் மதிப்பளித்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். 
தொடர்ந்து ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கேட்டுக்கொண்ட பாடல்கள் பாடியும், மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் இடத்தில் நடனங்கள் ஆடியும் அனைவரையும் அசத்தினார். 
 
ஜீவா பாடிய அவர் பாடலுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பின் தொடர்ந்து பாடி உற்சாக கோஷங்கள் எழுப்பி மகிழ்ந்தனர்.   
 
மேலும் மாணவ மாணவிகள் அவருக்கு நினைவு பரிசுகள் வழங்கி அவரது உருவம் பதித்த படங்கள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  
 
இதனைத் தொடர்ந்து கல்லூரியில் பல்வேறு சினிமா பாடல்களுக்கு மாணவ மாணவிகள் தங்களது திறமையை வெளிக் கொண்டு வந்து சிறப்பாக நடனங்கள் ஆடி அனைவரையும் கவர்ந்தனர்.