செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:42 IST)

மக்களே உஷார்! தர்பூசணியை சிவப்பாக்க ரசாயனம் கலப்பு!?

watermelon
வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ள நிலையில் பழத்தை சிவப்பாக காட்ட ரசாயனம் கலக்கும் செயல்களிலும் சிலர் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.



வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மக்கள் பலரும் தாகத்தை தணிக்க இளநீர், தர்பூசணி, நுங்கு என வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். பொதுவாக விலை குறைவாக கிடைக்கும் தர்பூசணி பலரது விருப்பமாக உள்ளது. இந்நிலையில் அதிகரித்து வரும் தர்பூசணி டிமாண்டினால் பழத்தை செயற்கையாக பழுக்க வைப்பது, சிவப்பாக காட்ட ரசாயனம் சேர்ப்பது போன்ற செயல்களிலும் சில வியாபாரிகள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டில் இதுபோல தர்பூசணியில் வண்ண சாயங்களை ஊசி மூலம் செலுத்திய வியாபாரிகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோல தற்போது தர்பூசணியை சிவப்பாக காட்டுவதற்காக சிவப்பு பொடியை சர்க்கரை பாகில் கலந்து பூசும் சம்பவங்களும் நடக்கிறதாம்.

தர்பூசணியை வாங்கி அதன் மேல் விரலை தேய்த்து பார்த்தால் கையில் சிவப்பு ஒட்டினால் அதன் மூலம் அது பொடி கலந்தது என கண்டறிய முடியும். பெரும்பாலும் தர்பூசணி சாப்பிட விரும்பும் மக்கள் சிவப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் வாங்குவது நல்லது. துண்டு போட்டு விற்கப்படும் பழங்களை வாங்குவதை விட ஒரே பழமாக வாங்கி சென்று வீட்டில் வைத்து சாப்பிடுவது சிறந்தது.

Edit by Prasanth.K