செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:53 IST)

சசிகலா வரும்போது அதிமுகவில் பிரச்சனை இருக்கு... கருணாஸ்!!

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அதிமுகவில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் பேச்சு. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, அடுத்த ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்று செய்தி வெளிவந்தது. இந்த செய்தி வெளியானது முதல் தமிழகர அரசியலில் குறிப்பாக அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 
 
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ இது குறித்து பேசினார். அப்போது அவர், அதிமுகவில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல தரப்பு கருத்துகள் பிரதிபலிக்கப்படுகிறது. சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அதிமுகவில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும். ஆனால் அதிமுகவில் சசிகலா இடம் பெறுவது குறித்து கருத்து கூற இயலாது என தெரிவித்தார்.