திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (04:35 IST)

ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசியதற்கு இந்த தண்டனையா? காவலர் மதியழகன்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் மெரீனாவில் நடைபெற்றபோது ஜல்லிக்கட்டை ஆதரித்த பேசாத தமிழர்களே இல்லை என்று கூறலாம். அன்றைய முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை ஜல்லிக்கட்டை ஆதரித்து பெருமையுடன் பேசினர்


 


ஆனால் ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசிய காவலர் மதியழகனுக்கு மட்டும் துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளைஞர்களிடையே ஆவேசத்துடன் ஜல்லிக்கட்டை ஆதரித்து மெரீனாவில் பேசிய காவலர் மதியழகனுக்கு விசாரணை முடியும்வரை பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடையாது என்று கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

காவலர் மதியழகன் மீதான நடவடிக்கைக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் உள்பட அனைத்து துறையினர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்த நிலையில் மதியழகனுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது நியாயம் இல்லை என்று அவர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.