செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:14 IST)

சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி!!

சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி அவரது மனைவி மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  


 
 
ஐபிஎஸ் அதிகாரி ஷபீர் கரீம் சிவில் சர்வீஸ் தேர்வில் புளூடூத் கருவியை மறைத்து வைத்து காப்பியடித்து சிக்கிக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் உதவியது தெரியவந்தது. 
 
இதனையடுத்து அவர்களையும் போலீஸார் தெலுங்கானாவில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, செல்போன், புளூடூத், கேள்வித்தாள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 
 
புளூடூத், செல்போனை பயன்படுத்தி காப்பி அடிக்க பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பனியன், சட்டையை ஷபீர் கரீம் அணிந்ததும், அதை அவரின் மனைவி வடிவமைப்பு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. 
 
விரிவான விசாரணைக்கு பிறகு ஷபீர் கரீம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி மற்றும் ஆசிரியரும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.