செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 28 செப்டம்பர் 2024 (18:08 IST)

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி ஈஷா யோகா மைய  தன்னார்வ அமைப்பை சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்திருந்தார். 
 
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினேஷ்......
 
ஈஷா யோகா மையம் சார்பில் மனு அளிக்க வந்துள்ளதாகவும் ஈஷா யோகா மையம் செய்யும் பல்வேறு நன்மையான  வேலைகளுக்கும் தொண்டுகளுக்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல காலங்களாக சிலர் பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதாக தெரிவித்தார். 
 
மேலும் அவர்களிடம் ஏதேனும் முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தையோ காவல்துறையையோ அணுகி தீர்வு கண்டிருக்கலாம் என்றார். ஒரு குழுவாக இணைந்து கொண்டு அவர்களுக்கு குழுவிற்கென்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு செயல்படுவதாகவும் அந்த குழுவில் இருக்கும் பல பேரின் பின்னணி  பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என கூறினார். 
 
மேலும் அவர்கள் எந்த ஒரு அடிப்படை ஆதாரம் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்துக்களை பதிவிடுவதாகவும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதாகவுன் தெரிவித்த அவர்  அரசாங்கத்தில் வகுத்திருக்கும் முறையான அணுகுமுறைகளை அவர்கள் பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டினார். ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர் முகாமில் எழுப்பப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தீர்ப்பு வரும்பொழுது முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றார். 
 
காமராஜ் என்பவர் தான் சமீப காலமாக தொடர்ந்து ஈஷா மீது அவதூறு பரப்புவதாகவும், அவர்களின் இரண்டு மகள்களே ஈஷாவில் தன்னார்வலர்களாக இருப்பதாகவும் கூறிய அவர் காமராஜ் வாரம் கூட இரு முறை வந்து அவர்களது மகள்களை சந்தித்து இனிப்புகள் வழங்கி செல்வதாகவும் ஆனால்  அதே சமயம் காமராஜ் தான் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் என்றார். மேலும் அவர்கள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் தங்களிடம் இருப்பதாகவும் ஈஷா மீது தற்போது குற்ரம்சாட்டும் நபர்கள் எவரிடமும் எந்த ஒரு முகாந்திரமும் ஆதாரமும் இல்லை  என தெரிவித்தார்.