1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2024 (17:42 IST)

அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு.! மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Minister Anitha
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல கோடி ரூபாய் சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை தன்னை ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில்  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் அமலாக்கத் துறையினர் யாரும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மட்டும் ஆஜராகினர்.
 
இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மாவட்ட நீதிபதி செல்வம் வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.