திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 4 மே 2024 (15:42 IST)

கோத்தகிரி மலைப்பாதையில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்!

சென்னை பகுதியை சார்ந்த 31 நபர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர்.
 
மேட்டுப் பாளையத்தில் இருந்து வாடகைக்கு மினி பேருந்து எடுத்து இரண்டு நாள் உதகைக்கு சுற்றுலா சென்றனர்.
 
சுற்றுலா  முடித்துவிட்டு கோத்தகிரி வழியாக வரும்போது பவானிசாகர் வியூ பாயிண்ட் பகுதியில் மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது விபத்து ஏற்பட்டது.
 
இதில் 16 பெரியோர்கள் மற்றும் 15 குழந்தைகள் என காயமடைந்தனர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
மேலும் படுகாயம் அடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக 7 பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
 
கோவை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.