ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (07:52 IST)

திமுக கவுன்சிலர்களே ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவா? அப்செட்டில் துரைமுருகன்..!

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் ஆகியவரிடையே கடும் போட்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த வாரம் திமுகவுக்கு ஆதரவாக இருந்த களம் இந்த வாரம் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் கூறியிருப்பதால் துரைமுருகன் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை ரிப்போர்ட்டில் திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களது சமூக வேட்பாளர் உள்ளதால் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக வேலை செய்து வருவதாக அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இதனால் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து அவசர கூட்டத்தை அமைச்சர் துரைமுருகன் கூட்டியபோது சில கேள்விகளை கேட்டு அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியதாகவும் இதனால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

 கடந்த வாரம் வரை திமுகவுக்கு ஆதரவாக இருந்த வேலூர் தொகுதி பிரதமரின் வருகை, ஏசி சண்முகம் தாராள செலவு, திமுக கவுன்சிலர்கள் சிலரின் ஆதரவு உள்பட சில காரணங்களால் தற்போதைய நிலையில் அவர் முந்துவதாக கூறப்படுகிறது. இதனால் வேலூர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva