திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 7 நவம்பர் 2016 (18:57 IST)

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி ஒன்று இடம்பெற்றது.


 

 
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-4க்கான தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் ஐஸ்வர்யா தனுஷ் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ஐஸ்வர்யா தனுஷ் பற்றிய கேள்வி இத்தேர்வில் ஏன் இடம்பெற வேண்டும் என்ற கேள்வி எல்லோரிடையும் ஏற்பட்டுள்ளது.
 
ஒருவேளை இவர் ரஜினியின் மகள் அல்லது தனுஷின் மனைவி என்பதால் என்றால் இல்லை. தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி, ஐக்கிய நாடுகள் அமைப்பில் பெண்களின் சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக இந்தியாவின் சார்பாக நியமிக்கப்பட்ட தூதர் யார்?
 
இதற்கு விடை ஐஸ்வர்யா தனுஷ். அண்மையில் இவர் இப்பதவியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் இவரைப்பற்றிய கேள்வி இத்தேர்வில் இடம்பெற்றது.