1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : திங்கள், 10 நவம்பர் 2025 (16:31 IST)

அபிநய் மரணம்.. கண்டுகொள்ளாத உறவினர்கள்!.. இறுதி ஏற்பாடுகளை செய்த KPY பாலா...

அபிநய் மரணம்.. கண்டுகொள்ளாத உறவினர்கள்!.. இறுதி ஏற்பாடுகளை செய்த KPY பாலா...
மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த டி.ஆர். ராதாமணியின் மகன் அபிநய். தமிழில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். மூன்று மலையாள படங்களில் நடித்திருக்கிறார். 15க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும் அபிநய் நடித்திருக்கிறார்.
 
ஜங்ஷன் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். 10க்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதோடு இவருக்கு கல்லீரல் நோய் பிரச்சினையும் ஏற்பட தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் உடல் மெலிந்து, ஆளே மாறி, உருவமே மாறினார். 
இதைத்தொடர்ந்து நடிகர்கள் தனுஷ், KPY பாலா போன்ற அபுநய்க்கு பண உதவி செய்தார்கள். இந்நிலையில்தான் இன்று அதிகாலை தனது வீட்டிலேயே அவர் மரணமடைடைந்தார்.
 
அபிநய் இறுதி ஊர்வலத்தை நடத்த அவரின் உறவினர்களே ஆர்வம் காட்டாத நிலையில் சம்பவத்தை கேள்விப்பட்டு KPY பாலா அவரின் வீட்டிற்கு சென்று காலை முதலே இறுதி சடங்கு தொடர்பான பணிகளையும் அவரே செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.  இதைத்தொடர்ந்து பாலாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
அபிநய் மரணம்.. கண்டுகொள்ளாத உறவினர்கள்!.. இறுதி ஏற்பாடுகளை செய்த KPY பாலா...
 
பண உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் KPY பாலா காந்தி கண்ணாடி என்கிற படத்தில் நடித்த போது அந்த படம் தொடர்பான விழாக்களில் அபிநயை கலந்து கொள்ள செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.