செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (21:42 IST)

அண்ணா பல்கலை. பதிவாளர் திடீர் நீக்கம்: துணைவேந்தர் சூரப்பா அதிரடி

கடந்த சில நாட்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் என்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெரிந்ததே. இந்த நிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் பதிவாளராக இருந்த கணேசனுக்கு தொடர்பு என ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. இதனையடுத்து பதிவாளர் கணேசனை துணைவேந்தர் சூரப்பா அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
 
மேலும் கணேசனுக்கு பதிலாக அண்ணா பல்கலையின் பொறுப்பு பதிவாளராக ஜெ.குமார் என்பவரை நியமித்து துணைவேந்தர் சூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.