1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. aavin milk late to distribute people complaint

சென்னையில் மீண்டும் பால் தட்டுப்பாடு.. 8 மணி வரை பால் வராததால் பொதுமக்கள் அதிருப்தி..!

aavin
சென்னையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னால் பால் தட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 
 
அம்பத்தூர் பால்பண்ணையிலிருந்து காலை 4 மணிக்கு வர வேண்டிய பால் 8 மணி வரை வரவில்லை என அண்ணா நகர் அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். 
 
இன்று காலை 8 மணி வரை ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் பால் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தியில் உற்பத்தி பிரச்சனையில் 15க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்களில் பால்பாக்கெட் ஏற்றப்படாமல் பண்ணைக்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆவின் பால் கிடைக்காததால் அதிக விலையுள்ள தனியார் பாலை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்று உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆண் துணை இல்லாமல் தனக்குத்தானே கர்ப்பமான பெண் முதலை- இது எப்படி சாத்தியமானது?