வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (10:14 IST)

பொங்கலுக்கு தயாராகும் 2 கோடி நெய் பாட்டில்கள்! – அசராத பணியில் ஆவின்!

பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்காக நெய் பாட்டில்கள் தயாராகி வருவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு தமிழக அரசின் சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பை தொகுப்பும், பணமும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படும் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெறும் 21 பொருட்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது.

அதில் பொங்கல் பையில் 100 மி.லி நெய்யும் சேர்க்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் இடம்பெறும் இந்த நெய் பாட்டில்கள் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள ஆவின் நிறுவனம் பொங்கல் தொகுப்புக்காக மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.