புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (09:26 IST)

தக்காளி கொடுத்தால் பிரியாணி; பிரியாணி வாங்கினால் தக்காளி! – ஹோட்டலின் நூதன விளம்பரம்!

தமிழகத்தில் தக்காளில் விலை திடீரென உயர்ந்துள்ள நிலையில் உணவகம் ஒன்றின் விளம்பரம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதுடன் விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.150க்கும் மேல் தக்காளி விற்பனையாகி வரும் நிலையில் தக்காளி மொத்தமாக கிடைப்பதில் உணவகங்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுராந்தகத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல இரண்டு சிக்கன் பிரியாணி வாங்குபவர்களுக்கு அரை கிலோ தக்காளில் இலவசம் என கூறப்பட்டுள்ளது. ஹோட்டலின் இந்த நூதன விளம்பரம் வைரலாகியுள்ளது.