திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (13:38 IST)

இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்’’ -முதல்வர் மு.க.ஸ்டாலின்

Cm stalin
மிக்ஜாம்  புயல் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் சென்னை மாநகரைப் புரட்டி எடுத்துள்ள நிலையில், இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில்  வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை  படகு மூலம் போலீஸார்  மீட்டு  பாதுகாப்பு முகாம்களி தங்க வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் வெள்ள பாதிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் களத்திற்கு நேரடியாக சென்று உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: ''அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்’’ என்று  தெரிவித்துள்ளார்.