வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (10:02 IST)

யானைக்குட்டியை தோளில் சுமந்து தாய் யானையிடம் சேர்த்த இளைஞர்

இன்றைய நவீன உலகத்தில், சாலையில் யாராவது அடிபட்டுக் கிடந்தாலே மக்கள் பலர் கண்டும் காணாமலுமாய் செல்கின்றனர். ஆனால் ஊட்டியில் கால்வாயில் தவறி விழுந்த யானைக்குட்டியை இளைஞர் ஒருவர் தமது தோளில் சுமந்து சென்று தாய் யானையிடம் சேர்த்தார்.
ஊட்டியில் உள்ள வனப்பகுதியில் யானைக்குட்டி ஒன்று, தனது தாய் யானையிடமிருந்து வழிதவறி சென்று எதிர்பாராத விதமாக ஒரு கால்வாயில் சிக்கிக்கொண்டது. ரோந்து பணியின் போது குட்டியானை கால்வாயில் சிக்கி இருப்பதை கண்ட வனத்துறையினர், அதனை மீட்டு தாய் யானையிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட யானைக்குட்டிக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால் அதனால் நடக்க முடியவில்லை. வனத்துறை ஊழியர் ஒருவர் சட்டென்று அடிப்பட்ட யானைக்குட்டியை தோளில் சுமந்து சென்று தாய் யானையுடன் சேர்த்தார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த வனத்துறை அதிகாரியை பாராட்டினர்.