திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (09:11 IST)

'பொன்னியின் செல்வன் 2’ படம் பார்க்க சென்ற பெண் தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னையில் உள்ள திரையரங்கில் குழந்தைகளுடன் ’பொன்னின் செல்வன் 2’ படம் பார்க்க சென்ற இளம் பெண் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள பிவிஆர் திரையரங்கில் தனது இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் ’பொன்னியின் செல்வன் 2’ படம் பார்க்க சென்றார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது குழந்தைகளிடம் கழிவறை செல்வதாக கூறி அங்கிருந்த கார் பார்க்கிங் சென்ற இளம் பெண் அங்கிருந்து நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் ஐஸ்வர்யா என்றும் என்பதை கண்டுபிடித்து அதன் பின்னர் அவருடைய இரண்டு குழந்தைகளையும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 
 
முதல் கட்ட விசாரணையில் தனது 2 குழந்தைகளுடன் தனியாக இருந்தபோது மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவரது கணவர் பாலாஜி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் அவர் தன்னையே இரு நபர்களாக உணர்ந்து முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றின் பரிசோதனை செய்யப்பட்டபோது மன அழுத்த நோயினால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva