வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (10:03 IST)

ராசியில்லாத நடிகை என ஓரம்கட்டிய தமிழ் சினிமா… இப்போது கமல் படத்தில் ஹீரோயின்!

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.

இதன்பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கமலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. வித்யா பாலன் தன்னுடைய இளம் வயதில் தமிழ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த போது, அவரை ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தி ஒதுக்கியதாக சொல்லப்படுவதுண்டு. அதனால்தான் வளர்ந்த பின்னர் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. தமிழில் முதல் முதலாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.