செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified திங்கள், 14 நவம்பர் 2022 (22:45 IST)

அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகளுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும்-கே.பி.இராமலிங்கம்

bjp
முதல்வர் அரவக்குறிச்சியில் வழங்கிய மின் இணைப்புகளுக்கு  வெள்ளை அறிக்கை வேண்டும் கரூரில் பாஜக மேலிட பொறுப்பாளர் கே.பி.இராமலிங்கம் அதிரடி பேட்டி.
 
கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நாளை மாவட்ட அளவில் பல்வேறு இடங்களில் திமுக அரசின் பால்விலை உயர்வினை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற உள்ளதையடுத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான கே.பி.ராமலிங்கம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது., மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு ஆகியவற்றினால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஒரிரு தினங்களுக்கு முன்னர், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிய நிகழ்ச்சியில் 50 ஆயிரம் நபர்களுக்கு மின் இணைப்புகள் கொடுக்கவில்லை என்றும், அதில் ஒரு புத்தகமே வெளியிட்டதை சுட்டிக்காட்டிய பாஜக நிர்வாகி கே.பி.ராமலிங்கம், அந்த பயனாளிகளில் விசாரணைக்காகவும், தட்கல் முறையில் சுமார் 2.50 லட்சம் பணம் கட்டியவர்களும் அந்த பயனாளிகளில் அடங்குவர், ஆகவே இந்த 50 ஆயிரம் பயனாளர்கள் மற்றும் கடந்த 1 லட்சம் பயனாளர்கள் என்றும் முழு வெள்ளை அறிக்கையினை மின்சார வாரியமும், முதல்வரும் வெளியிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அது மட்டுமில்லாமல், ஆகவே, ஆவணங்களை சமர்பியுங்கள் என்று சொன்ன கடிதங்களை கொண்டு 50 ஆயிரம் நபர்களுக்கு மின் இணைப்பு என்று கூறுவது சாத்தியமல்ல, ஆகவே, முழு தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கையினை தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசின் திட்டங்களில், தமிழக திமுக அரசு தனது ஸ்டிக்கர் ஒட்டி நாடகமாடுகின்றது.

ஆகவே, இதற்கு ஒரு சர்ட்டிபிகேட் முதல்வர் வந்து கொடுக்கின்றார். இதே  செந்தில்பாலாஜியை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஒரு சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார். மணல் திருடன் என்றும், பல கட்சிகள் மாறியவர் என்றெல்லாம், கூறியவைகள் வீடியோக்களாக பல்வேறு காட்சிகள் அமைந்து வலம் வருகின்றன. இதுமட்டுமில்லாமல், உச்சநீதிமன்றமே குற்றவாளி என்ற கோணத்தில் அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யலாம் என்று சொல்லி, தற்போது கூட ஒரு மனுக்களை திமுக அரசு போட்டுள்ளது அதனை கூட உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆகவே, இந்த வழக்கிற்கு மூலக்காரணமே மு.க.ஸ்டாலின் தான், அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முழு பொறுப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. தமிழகத்தில் வெள்ள வடிகால் பணிகள் முழுமையாக செய்துள்ளதாகவும், முழுமையாக செய்து விட்டதாகவும் தெரிவித்தார். சென்னையும், சரி மற்றும் பல்வேறு பகுதிகளில் படகு ஓட்டும் பணி தீவிரமடைந்து வருகின்றது. மேலும், நேற்று கொளத்தூர் பகுதியில் தமிழக முதல்வரை செய்தியாளர் ஒருவர் வெள்ளத்தினை பற்றி கேள்வி கேட்ட போது அதற்கு மிரட்டும் தோனியில் பேசிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது. ஊடகங்கள் மட்டுமில்லாமல், சமூக வளைதளங்களிலேயே மிகவும் வைரலாகி வருகின்றது என்றும் தெரிவித்தார்.