1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (16:19 IST)

தக்காளி விற்று 20 நாட்களில் 30 லட்சம் வரை லாபம் பார்த்த வியாபாரி கொலை

ஆந்திரா மாநிலத்தின் போடிமல்லாடினா என்ற கிராமத்தைச் சேர்ந்த தக்காளி வியாபாரி என்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தக்காளி ஒரு கிலோ விலை ரூ.180 வரை உயர்ந்தது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விலையேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.

 
இந்த நிலையில், ஆந்திராவில் தக்காளி விற்பனை செய்து வந்த ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்  ராஜசேகர். விவசாயியான இவர், தன் தோட்டத்தில் தக்காளி பயிருட்டு வருகிறார். கடந்த சில நாட்களில் தக்காளி விலை  உயர்ந்த நிலையில், 20 நாட்களில் இவர் 30 லட்சம் வரை லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன் தோட்டத்தில் இருந்து தக்காளியை பாதுகாத்து வந்த நிலையில் தோட்டத்தில் இன்று சடலமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடந்தி வருகின்றனர்.

தக்காளி விற்று அவர் சம்பாதித்த பணத்தைக் கொள்ளையடிக்கவே கொலை செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.