திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (11:21 IST)

நாளை புறப்படும் சந்திரயான் 3! திருப்பதியில் விஞ்ஞானிகள் வேண்டுதல்!

Chandrayaan 3
இஸ்ரோவின் ‘சந்திரயான் 3’ ராக்கெட் நாளை புறப்பட உள்ள நிலையில் இன்று அதன் மாதிரியை திருப்பதி கோவிலில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்துள்ளனர்.



இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் மற்றும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் ஆகிய விண்கலங்களை ஏவி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக இஸ்ரோ நிலவு ஆராய்ச்சிக்காக அனுப்பிய சந்திரயான் 1 வெற்றிகரமாக தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க இருந்த கடைசி சில நொடிகளில் இணைப்பை இழந்தது. இந்நிலையில் தற்போது நிலவு ஆராய்ச்சிக்கான சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்துள்ளது.

இதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கும் நிலையில் நாளை நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறது சந்திரயான் 3. இந்நிலையில் இன்று சந்திரயானின் மாதிரியை திருப்பதிக்கு கொண்டு சென்று அங்கு ஏழுமலையான் கோவிலில் வைத்து விஞ்ஞானிகள் வழிபாடு செய்துள்ளனர்.

நாளை ஏவப்படும் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டும் என நாடு முழுவதும் மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K