செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 அக்டோபர் 2020 (12:19 IST)

உறவினர் போல வந்து மொய் பணத்தை அபேஸ் செய்த ஆசாமி! – கலவரமான கல்யாண வீடு!

கும்மிடிபூண்டியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர் போல வந்து மொய் பணத்தை திருடி சென்ற ஆசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்துள்ளது.

நிகழ்ச்சியில் மணமக்களிடம் சிலர் கையில் மொய் கவர்களை தர அதை அருகில் இருந்த அவர்கள் உறவினர்கள் வாங்கி வைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஆசாமி ஒருவர் தான் இரவு உணவு உண்டு விட்டதாகவும், மொய் கவரை தான் வாங்கி வைப்பதாகவும் சொல்லி மற்றவர்களை சாப்பிட அனுப்பியுள்ளார்.

பிறகு சில நிமிடங்களில் அந்த ஆசாமி மொய் பணம் வாங்கி வைத்த பையோடு எஸ்கேப் ஆகியுள்ளார். வந்தவர் உறவினரா என்பது கூட தெரியாமல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மொய் பணத்தை புதுமண தம்பதிகள் இழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் மண்டபத்தின் சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆசாமியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.