திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (19:46 IST)

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து...12 பேர் உயிரிழப்பு

pakistan
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 
 
இங்குள்ள பலுசிஸ்தானில் சுரங்கம் தோண்டும்போது பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் மாவட்டத்தில் உள்ள சர்தாலோ என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவில் 20 தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது மீத்தேன் வாயுக்கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இவ்விபத்து பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.