1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (15:39 IST)

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்கள் தேர்ச்சி.! 10 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை..!!

Students
கேரளாவில் ஒரே பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய 13 இரட்டையர்களும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவில் கடந்த மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. நேற்று மாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியானது. 
 
இதில் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொடியாத்தூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இந்த பள்ளி மாவட்ட அளவில் மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளது. அதிகப்படியான மாணவர்கள் இந்த பள்ளியில் இருந்து இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர்.

 
அதாவது 877 மாணவர்கள் ஒரே நேரத்தில் இந்தப் பள்ளியில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதி உள்ளனர். தற்போது, தேர்வில் வெற்றிபெற்ற இரட்டையர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.