திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (10:39 IST)

சேலத்தில் 3ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் - ஆசிரியரை செருப்பால் அடித்து துவைத்த பெற்றோர்

சேலத்தில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் செருப்பால் அடித்து துவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் 3 ரோடு பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்த பள்ளியில் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார்(24) என்பவர் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
 
இந்நிலையில் சதீஷ்குமார் பள்ளியில் படித்து வரும் 3 ஆம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ந்து போன பெற்றோர், பள்ளிக்கு சென்று அந்த அயோக்கியன் சதீஷ்குமாரை பள்ளியில் இருந்து தரதரவென வெளியே இழுத்து வந்து சரமாரியாக செருப்பால் அடித்து துவைத்தனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கைது செய்தனர். இந்த மாதிரி செய்பவர்களுக்கு கொடூர தண்டனை வழங்கினால் தான் பாலியல் குற்றங்கள் குறையும் என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கூறினர்.