திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (10:57 IST)

சத்தியத்தை மீறி மது குடித்த தந்தை - விரக்தியில் மாணவி தற்கொலை

சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பெற்றோரின் குடிப்பழக்கத்தால் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்கதையாகி வருகிறது.
 
தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரஞ்சினி(16), கனிமொழி (13) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ரஞ்சனி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். கனிமொழி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவழித்து வந்த முருகனிடன் அவரது மகள், இனி குடிக்கக்கூடாது என சத்தியம் வாங்கியுள்ளார். மகளின் பேச்சைக் கேட்டு முருகனும் கடந்த 3 மாதங்களாக மது குடிக்கவில்லை
 
இந்நிலையில் நேற்று மகள் பள்ளிக்கு சென்ற நேரத்தில் முருகன் மது குடித்துள்ளார். பள்ளி முடிந்தபிறகு வீட்டிற்கு வந்த ரஞ்சனி, தந்தை தன்னிடம் அளித்த சத்தியத்தை மீறி மது குடித்திருப்பதைக் கண்டு மனமுடைந்தார்.
 
இதனையடுத்து தனது அறைக்குள் சென்று ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தந்தையின் குடிப்பழக்கத்தால் மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.