பொள்ளாச்சி வீடியோவை வெளியிட்டது ஏன்? நக்கீரன் கோபால் பகீர் தகவல்

Last Updated: புதன், 13 மார்ச் 2019 (14:26 IST)
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்ட தட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20-க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். 
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்படலாம் என பேசப்படுகிறது. தமிழக அரசும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளது. 
 
இந்த விவகாரம் வெளியே வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நக்கீரன் வெளியிட்ட வீடியோதான். இதுபோன்று இன்னும் பல வீடியோக்களை அந்த அயோக்கியர்களிடம் இருந்து போலீஸார் கைபற்றியுள்ளனர். 
pollachi
இந்நிலையில், ஒரு பெண் கதறும் வீடியோவை இப்படி வெளியிட்டது ஏன் என நக்கீரன் கோபாலிடம் கேட்ககப்பட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிடக்கூடாது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. 
 
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது. எந்த நோக்கத்திற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டதோ, அது தற்போது நடந்துள்ளது.
 
மேலும், பொள்ளாச்சி விவகாரத்தை இப்படியே விடப்போவது இல்லை. இந்த கொடுமையை குறித்து நாங்களும் தனியாக விசாரித்து வருகிறோம். எங்களது விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான முழு பின்னணியையும் விரைவில் நக்கீரன் வெளியிடும் என்ற பகீர் தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :