செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (12:37 IST)

2.0 : ஷங்கரை கலாய்த்த பிரபல இயக்குனர் - சர்ச்சை ட்விட்டால் கொந்தளித்த திரையுலகம்

2.0 குழந்தைகளுக்கான படம் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட் செய்துள்ளார்.
 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0, படம் குழந்தைகளுக்கான படம் என பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியிருப்பது தமிழ் திரையுலகில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர். 
 
இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் ‘பைரவா கீதா’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் சித்தார்த் தாதூலு இயக்கியிருக்கும் இந்த படம், சாதி பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கிறது. 
 
தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாக உள்ளது. அதே தினத்தில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான 2.0 படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .