1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (12:54 IST)

காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன...?

Mangani festival 1
முன்பொரு காலத்தில் சோழமண்டலத்தின் காரைக்காலில் தனதத்தன் என்பவருக்கு புனிதவதி என்று ஒரு மகள் பிறந்தாள். செல்வம் கொஞ்சி வளர்த்த மகள் சிறு வயதிலிருந்தே சிவபெருமானின் பக்தையாக வளர்ந்தாள். அதனால் அவள் சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அந்த ரூபத்தில் சிவனைக் கண்டு மகிழ்ந்தாள்.


இப்படி ஒரு நாள் அவள் வயது வர, தன் ஆசை மகளை நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தன் என்ற வியாபாரிக்கு தனதத்தன் மணமுடித்து வைத்தார். எந்தக் குறையும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்து, இவர்களும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் வியாபார ரீதியாக வந்த ஒருவர் பரமத்ததனிடம் இரு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். அந்த மாங்கனிகளை வீட்டில் உள்ள தன் மனைவியாரிடம் கொடுத்து விடுமாறு வேலையாளிடம் சொல்லிவிட்டு இவர் தன் வியாபாரத்தில் கவனம் செலுத்தினார்.

புனிதவதி சுவையாக அன்னம் சமைத்து தயார் செய்து தன் கணவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அந்நேரத்தில் சிவபெருமான் சிவனடியார் போன்று வேடம் பூண்டு புனிதவதி வீட்டிற்குச் சென்றார். சிவனடியாரைச் சந்தித்த சந்தோஷத்தில் அவரை கும்பிட்டு இந்த மாங்கனிகளில் ஒன்றை வைத்து அவருக்கு அமுது படைத்தார். வந்த சிவனடியார் வயிறார சாப்பிட்டுவிட்டு வாழ்த்தி சென்றார்.

உணவு அருந்த வந்த பரமதத்தன் ஒரு மாங்கனியை சுவைத்துவிட்டு, "அடடே இது என்ன அமுதம் போன்று இருக்கிறதே! அந்த இன்னொரு பழத்தை எடுத்து வா' என்று கூறினார். செய்வது அறியாது திகைத்த புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானிடம் 'நான் இப்போது என்ன செய்வேன் இறைவா? என் கணவர் என்னிடம் இன்னொரு பழம் கேட்கிறாரே, அதை நான் சிவனடியாருக்கு அமது படைத்துவிட்டேனே! நான் என்ன செய்வேன்' என்று அழுதிருக்கிறார்.

உடனே புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி வந்தது. ஆனந்தத்தில் புனிதவதி அந்தக் கனியை தன் கணவருக்கு பரிமாறினாள். அதைச் சாப்பிட்ட பரமதத்தன் 'இது என்ன தேவாமிருதம் போல் இருக்கிறது, ஒரு மரத்துக் கனிகளின் சுவை எப்படி வேறுபடும்' என்று கேட்டார்.

இவை ஒரு மரத்துக் கனிகள் அல்ல, இரண்டாவது கனி எனக்கு சிவபெருமான் கொடுத்தது என்றார். என்ன? கடவுளிடம் நீ பேசுகிறாயா? அப்படியானால் நீ கடவுளுக்குச் சமம். நீ உயர்ந்தவள். உன்னுடன் என்னால் வாழ முடியாது என்று வீட்டை விட்டு வெளியேறினான். தன் கணவருக்காக பல காலம் காத்திருந்து, சிவபெருமானைக் காண பேயுருவம் கொண்டு கைலாசத்திற்கு கையால் நடந்துச் சென்றார்.

புனிதவதியாரைக் கண்ட சிவபெருமான் 'அம்மையே' என்று அன்புடன் அழைத்து, இனி உன் புகழ் இவ்வுலகம் எங்கும் பரவும் அம்மையே. அதற்காகத் தான் நீ இவ்வளவு துயரம் அடைந்திருக்கிறாய்! என்றுக் கூறி அன்று முதல் இன்று வரை இந்த மாங்கனி திருவிழா புனிதவதி அம்மையாரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்காலில் வெகு விமர்சியாகக் கொண்டாடப் படுகிறது.