திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (10:11 IST)

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் உலா வந்த மர்ம ஆசாமி! – போலீஸார் விசாரணை!

நேற்று திருச்சியில் நடந்த ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டில் மர்ம நபர் கத்தியுடன் சுற்றி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கட்சியின் பொதுசெயலாளராக ஆகியுள்ள எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி அறிவித்தார்.

ஆனால் அதிமுக பொதுக்குழு கூட்டம், எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளராக தேர்வானதை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு நடத்தி வருகிறார். இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக கட்சியின் 50 ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் பிரம்மாண்டமான மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் மர்ம ஆசாமி ஒருவர் கையில் கத்தியுடன் விழா மேடைக்கு அருகே சுற்றி திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அந்த நபரை பிடித்த போலீஸார் மேடைக்கு பின்புறம் இழுத்து சென்றனர். அங்கு அதிமுக தொண்டர்களும் கூடியதால் பரபரப்பு எழுந்தது. பின்னர் அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Edit by Prasanth,K