திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (22:09 IST)

விஜய்யின் அரசியல் பிரவேசம் எப்போது? முக்கிய தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என தெரிகிறது.

ஏற்கனவே விஜய் ஒவ்வொரு பட விழாவிலும் குட்டிக் கதைகள் பேசுவதும், படங்களில் அரசியல் டயலாக்குகள் பேசுவதும் அவர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் எனக் கூறப்பட்டன.

இதையொட்டி, விஜய் மக்கள் இயக்கத்தினர்  பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபடுவதும், ஊராட்சி , நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை அழைத்துப் பாராட்டினார்.

இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பற்றிய விவரங்கள் விஜய் கேட்டுள்ளதாகவும், கடந்த 5 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அரசியல் கட்சி விவரங்களை அவர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், லியோ பட ஆடியோ விழாவில் விஜய்  மாநாடு போன்று பிரமாண்டமாக நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.