1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (20:13 IST)

சூடானில் உள்ள இந்தியர்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

PM Modi
சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்தது. எனவே ராணுவத் தளபதிகளின்  இறையாண்மை அமைப்பு என்ற பெயரில் ஆட்சி  நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ராணுவ ஆட்சியில் இருந்து மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டுமென்ற முன்மொழிவின்படி, ராணுவத்துடன் , துணை ராணுவப்படையை இணைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தினமும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,, சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று  அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை  பற்றி பிரதமர் மோடி இன்று உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், தொடர்ந்து இந்தியர்கள் நிலைப்பற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டு என்று அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார்.

இதுகுறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: ‘’இன்று நாங்கள் ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சூடான் நிலைமையைப் பற்றி விவாதம் மேற்கொண்டோம். டெல்லியிலுள்ள எங்கள் குழு சூடாலில் உள்ள இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளதாக’’ கூறினார்.