1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (21:18 IST)

இறந்து பிறந்த குழந்தை.....மருத்துவர்கள் அலட்சியம் என குற்றச்சாட்டு !

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள நங்கு நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்  ஸ்ரேயா பானு. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின், அவருக்குப் பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர்கள், அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துள்ளது எந்று கூறி மருத்துவரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Sinoj