செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (16:07 IST)

கன்னியாக்குமரிக்கு தூக்கி அடிங்க..! – மருத்துவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!

Duraimurugan
காட்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சோதனைக்கு சென்ற அமைச்சர் துரைமுருகன் அங்குள்ள மருத்துவர்களிடம் ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

காட்பாடி தொகுதியில் உள்ள பொன்னை அரசு மருத்துவமனை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் பாம்பு கடி சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நிலையில் பாம்பு கடிக்கான அவசியமான மருந்துகள் மருத்துவமனையில் இருப்பதில்லை என்றும், மருத்துவர்களும் அடிக்கடி பணியில் இல்லாமல் இருப்பதாகவும் புகார்கள் இருந்து வந்தது.


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உடன் அமைச்சர் துரைமுருகனும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் இரண்டு பெண் மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்தார்.

அப்போது அங்கு வந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் அவரது ஊரை விசாரித்த அமைச்சர் துரைமுருகன் “இவரை கன்னியாக்குமரிக்கு தூக்கி அடிங்க” என ஆவேசமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.