செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 டிசம்பர் 2020 (07:32 IST)

ரஜினிகாந்த் அறிக்கையில் என்ன இருக்கும்? கசிந்த தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின்னர் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் நேற்று மாலை அல்லது இன்று ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்றும் அதில் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவல்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன்று ரஜினிகாந்தின் அறிக்கை வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அதில் அவரது முக்கிய அறிவிப்பு ஒன்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் அதுவரை மக்கள் மன்றம் மூலம் நற்பணிகள் தொடரட்டும் என ரஜினிகாந்த் தனது அறிக்கை மூலம் தெரிவிப்பார் என தகவல் வெளிவந்துள்ளது
 
இந்த தகவலால் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வரும் தேர்தலில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து களமிறங்க மாட்டார் என்றே அவரது தரப்பினரிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது