1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 22 நவம்பர் 2017 (08:46 IST)

அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை: அசோக்குமார் தற்கொலையால் போலீஸ் சுறுசுறுப்பு

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், பிரபல பைனான்சியர் அன்புச்செழியனால் மிரட்டப்பட்டதால் தற்கொலை செய்து கொள்வதாக நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.





இந்த நிலையில் அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுவதால் அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து வருகிறது. இந்த தனிப்படை அன்புச்செழியனை பிடிக்க தீவிர வலைவீசி வருகிறது. அன்புச்செழியன் விரைவில் பிடிபடுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலும் அசோக்குமாரின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.