சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 29 மே 2024 (10:39 IST)

ஏண்டா நான் போற பாதையில வண்டியை நிறுத்தி வச்சு இருக்க - வாகனங்களை தள்ளி விட்டு சென்ற ஒற்றை காட்டு யானை!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், புதுப்பாளையம், தாளியூர் போன்ற பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.கடந்த நான்கு நாட்களாக அப்பகுதியில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை அப்பகுதியில் உள்ள விலை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
 
மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருக்கிற இருசக்கர மற்றும் நான்கு வாகனங்களை "நான் போற பாதையில ஏன் வண்டியை நிறுத்தி வைத்து உள்ளீர்கள் என்பது போன்று தள்ளிவிட்டு செல்கின்றது"
மேலும் வீடுகளில் உள்ள மேற்கூரைகளை பிரித்து மேய்ந்து விடுகிறது.
 
அங்கிருந்து அரிசி, பருப்பு மூடைகளை தின்றுவிட்டு வீசி செல்கிறது. இதனால் அச்சத்தில் இருக்கின்ற அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.அவர்களிடம் போக்கு காட்டிக் கொண்டு அவர்களை ஏமாற்றி அருகில் இருக்கின்ற மலைப் பகுதியில்  பதுங்கி கொண்டு இருக்கிறது. 
 
இதனை அடுத்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதனால் உயிருக்கு பயந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருந்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.