1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (14:41 IST)

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வெண்கல விருது.. சிறந்த பாதுகாப்பு செயல்திறனுக்காக அறிவிப்பு..!

Metro Train
இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில்  2024ம் ஆண்டுகான பாதுகாப்பு விருதுகளில் மதிப்புமிக்க 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கலம் விருது பெற்றுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!2ம் கட்ட பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த பாதுகாப்பு செயல்திறனுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேசிய அளவில் பாதுகாப்பில் முன்னணி
மூன்று இடங்களில் சுரக்ஷா புரஸ்கார் வெண்கல விருது பெற்றுள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் (NSCI). 2024 ஆம் ஆண்டுகான பாதுகாப்பு விருதுகளில் மதிப்புமிக்க 'சுரக்ஷா புரஸ்கார் வெண்கலம் விருது பெற்றுள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியா (NSCI) வழங்கிய இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், 2-வது கட்ட பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் காட்சிப்படுத்தப்பட்ட சிறந்த பாதுகாப்பு செயல்திறனுக்காக வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ன் கட்டுமான பணிகள் 118.9 கி.மீ. நீளத்தில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
 
இந்த விருது குறிப்பாக, கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து பாரதிதாசன் சாலை மெட்ரோ நிலையம் வரையிலான UG-01 தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. இது ITD Cementation India நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு
வருகிறது.
 
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரரான ITD Cementation India Ltd ஆகிய இரு நிறுவனங்களும், கட்டுமான பாதுகாப்பிற்கான Suraksha Puraskar விருது மூலம் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் விருது மதிப்பீட்டின் போது முதல் 3 இடங்களில் ஒன்றாக இருந்தது மற்றும் இந்தியா முழுவதும் மெட்ரோ இரயில் திட்ட பிரிவில் இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே நிறுவனமாகவும் உள்ளது.
 
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ன் கட்டுமானம் மற்றும் செயல்பாடு முழுவதும் உயரிய பாதுகாப்புத் தரநிலைகளை பின்பற்றி, அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்க உள்ளதை உறுதி செய்கிறது.
 
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் (21.01.2025), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் (தர உறுதி/தரக் கட்டுப்பாடு) திரு. பி. கவுந்தின்ய போஸ். இந்த விருதினை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எம்.ஏ.சித்திக் இ.ஆ.ப. அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ITD Cementation India நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 
Edited by Siva